24 மணி நேரத்துக்குள் 9 கெட்டப்புகளில் வரும் கதிர்

cYOd-NUX‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’ ஆகிய படங்களில் நடிப்பால் கவனம் ஈர்த்த கதிர், ‘சிகை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருக்கிறார். ‘சிகை’ படத்தில் பெண் சாயலில் மேக்கப் போட்டு, இவர் கதிரா? என்று கேட்கும் அளவுக்கு தன்னையே மாற்றிக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சிகை’ படத்தில் வருகிற ஒரு கதாபாத்திரத்திற்கு பெண் சாயல் தேவைப்பட்டது. அதனால், எனது கெட்டப்பை மாற்றிக் கொண்டுள்ளேன். இப்போது, அந்த கெட்டப்புக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தில் மொத்தம் ஒன்பது கதாபாத்திரங்கள். அதில் ஒன்றுதான் இந்த பெண் கதாபாத்திரம். ‘சிகை’ 24 மணி நேரத்திற்குள் நடக்கிற கதை என்றார்.

இப்படத்தை ஜெகதீசன் சுபு என்பவர் இயக்குகிறார். கதிர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய அப்பா முன்னாள் விநியோகஸ்தர். சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் கதிருக்கு சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் ஆசை இருந்ததாம்.

இருந்தும், காலேஜ் வரை அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லையாம். கடைசியில், மதயானைக்கூட்டத்துக்கு தன் வயதுடைய இளைஞர் தேவைப்பட்டதை அறிந்து, அதில் தேர்வாகி படத்தில் நடித்து வருகிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries