பெண் இயக்குனர்கள் வரிசையில் ஹாஷிகா தத்

Hashika-Dutt-5தற்போது பெண்கள் படம் இயக்குவதில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி, ‘பூவரசம் பீ பீ’ படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தை இயக்கிய கீதாஞ்சலி செல்வராகவன் ஆகியோர் பெண் இயக்குனர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஹாஷிகா தத் ‘பேபி டால்’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். கே.எஸ்.ரவி ஷங்கர் வழங்க, குத்துஸ் பாஷா தயாரிக்க இருக்கிறார். இப்படத்தை ஹாஷிகா தத் இயக்குவது மட்டும் இன்றி படத்தின் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.

இதைப்பற்றி ஹாஷிகா தத் கூறும்போது, ‘எனக்கு படம் இயக்குவதில் மிகவும் ஆர்வம் உண்டு, நான் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே படம் இயக்க வாய்ப்புகள் தேடிக்கொண்டுத்தான் இருந்தன.

பேபிடால் படம் முழுக்க முழுக்க காமெடி படம். இதில் புதுமுகம் மானஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, கே.பாக்கியராஜ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries