பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் திரைப்படங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும்: ஐகோர்ட்டில் மனு

Madras-High-Courtசென்னை எழும்பூரை சேர்ந்தவர் பாலம்பாள் (வயது 60). இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நடிகர் சிம்பு பாடிய ‘பீப்’ என்று ஆபாச பாடல் வெளியானது குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் அதிகம் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது தமிழகத்தில் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதாவது, ‘பீப்’ ஓசை மூலம் மறைக்கப்பட்ட வார்த்தை என்ன? என்பதை தெளிவாக குறிப்பிடாமலும், யார்? எந்த ஊரில் வைத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது? என்ற விவரங்கள் எதுவும் இல்லாமலும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிம்பு மீது வழக்குப்பதிவு செய்ய வேகம் காட்டியதுபோல, ஊடகங்கள், திரைபடங்களில் பெண்களை அசிங்கமாகவும், அவதூறாகவும் பாடல் வரிகளில், வசனங்களில், காட்சிகளில் சித்தரிக்கப்படும்போது, வேகமாக போலீசார் வழக்குப்பதிவு செய்வார்களா? என்ற கேள்வி எழுகிறது.

உண்மையிலேயே பெண்களை ஆபாசமாக சித்தரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று போலீசார் நினைத்தால், பீப் பாடல்களுக்காக சிம்பு, அனிருத் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ததுபோல, பெண்களை எந்த வடிவில் ஆபாசமாக சித்தரித்தாலும் அதன்மீது வழக்குகளை பதிவு செய்யவேண்டும்.

எனவே, டி.வி., சேனல்கள், திரைபடங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பாடல் வரிகள், பாடல் நடனக்காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவைகள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய உத்தரவிடவேண்டும்.

இதுதொடர்பாக 26-ந்தேதி நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries