விஷால் தொடங்கி வைக்கும் கல்வித் திருவிழா

Actor Vishalநேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் புதுவண்ணாரப் பேட்டை சுங்கச்சாவடி அருகில் உள்ள தங்கம் மாளிகையில் கல்வித் திருவிழா நிகழ்ச்சி நாளை மறுநாள் (1–ந்தேதி) தொடங்கி 3–ந்தேதி வரை நடக்கிறது. இதனை நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தொடங்கி வைக்கிறார்.

இங்கு உயர்கல்வி மாணவ–மாணவிகளுக்கான முன்னணி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பதிப்பங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன.

10–ம் வகுப்பு, பிளஸ்–2 வகுப்புக்கு பிறகு மாணவர்கள் சேர விரும்பும் கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பற்றி தெரிந்து கொள்ளலாம். கல்வித் திருவிழாவில் பங்கு பெறும் மாணவ–மாணவிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online