33 படங்களில் 94 பாடல்கள்: 2015-ஆம் ஆண்டில் நா.முத்துக்குமார் சாதனை

9_5_Day Out - Na. Muthukumar_na-muthukumarகடந்த 11 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கோலோச்சி வருபவர் நா.முத்துக்குமார். இந்தியாவின் மிகப்பெரிய விருதான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.

தொடர்ந்து நிறைய படங்களில் அதிக பாடல்களை எழுதி வரும் நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதியுள்ளார். இதில், 9 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

பாபநாசம், காக்கிச்சட்டை, பசங்க 2, டார்லிங், விஎஸ்ஓபி உள்ளிட்ட இந்த வருடம் வெளிவந்த படங்களில் வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள நா.முத்துக்குமார், அடுத்த வருடம் வெளிவரவிருக்கும் ‘தெறி’, ‘சேதுபதி’, ‘கோ-2’. ‘தரமணி’ உள்ளிட்ட 120 படங்களுக்கும் மேல் பாடல்களை எழுதி வருகிறார்.

2015-ஆம் வருடம் வெற்றி வருடமாக அமைந்ததுபோல், அடுத்த வருடமும் வெற்றி வருடமாக அமையும் என்று நா.முத்துக்குமார் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

2015-ல் அதிக பாடல் எழுதியுள்ள இந்த தருணத்தில், இவருக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பாடிய பாடகர்கள், பாடகிகள், சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் நா.முத்துக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries