கில்லிங் வீரப்பன் படத்தை தடை செய்யமுடியாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

killing-virapanபிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கில்லிங் வீரப்பன்’. சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டள்ள இப்படம் வருகிற ஜனவரி 1-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு தடை கோரி பன்னீர்செல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘கில்லிங் வீரப்பன்’ படத்தில் வீரப்பனுடைய மனைவி முத்துலட்சுமி குறித்து அவதூறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், மலைவாழ் மக்களை கொலைகாரர்களாக காட்டியுள்ளதாகவும் கூறி, இந்த படம் வெளிவந்தால் பெரிய பிரச்சினை ஏற்படும். ஆகையால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ‘கில்லிங் வீரப்பன்’ படத்தை தடை செய்ய முடியாது என்று உத்தரவிட்டார் மேலும், இந்த மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் கூறினார். அன்றைய தேதியில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online