இளையராஜாவுக்கு கேரள அரசு விருது: உம்மன்சாண்டி 20–ந்தேதி வழங்குகிறார்

ILAYARAJA NEW_0_0_0_0திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா இதுவரை ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

மேலும் இசை ஆல்பங்களும் வெளியிட்டு உள்ளார். திரைப்பட துறையில் அவர் படைத்த சாதனைகளை பாராட்டி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவருக்கு கேரள அரசின் விருது வழங்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் வருகிற 20–ந்தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதை கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி இளையராஜாவுக்கு வழங்குகிறார். ‘நிஷாகந்தி சங்கீத விருது’ என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருது ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் அடங்கியதாகும்.

இந்த விருது வழங்கும் விழாவில் திரைத்துறையில் சாதனை படைத்த பல்வேறு கலைஞர்களும் விருது பெறுகிறார்கள். மேலும் மலையாள திரைப்பட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries