கௌதம் கார்த்திக் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

gautham-karthik-ilayarajaமணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இப்படம் சரியான வெற்றி பெறாத நிலையில், அடுத்தடுத்து ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’ அகிய படங்கள் வெளியாகி தோல்வியை தழுவியது. தற்போது ‘இந்திரஜித்’, ‘ரங்கூன்’, ‘சிப்பாய்’ ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக ‘முத்துராமலிங்கம்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இவர் இசையமைக்கப்போகும் 1001-வது படமாகும். இளையராஜாவின் 1000-மாவது படமான ‘தாரைதப்பட்டை’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

‘முத்துராமலிங்கம்’ படத்தை குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கிறார். ராஜதுரை என்பவர் இயக்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries