வெள்ள பாதிப்பு பற்றி பார்த்திபனின் பீப் பாடல்

r-parthiban_136989496715சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது நடிகர் பார்த்திபன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

தற்போது சென்னை மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பார்த்திபன் வெள்ளப் பாதிப்பு பற்றி ‘த்துதா மித வகுதா’ என்ற ‘பீப்’ பாடலை எழுதி யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் கூறியதாவது:–

ஒரு சராசரி மனிதனாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தால் அந்த துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரியத்தை நடத்துவார்கள்.

அதே போல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது ‘‘பீப்’’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ’’பீபீ’’ என்று தொடங்குவது போல எழுதினேன்.

இந்த பாடலில் வெள்ள பாதிப்பின்போது பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களை ஆட வைத்தேன். இதில் சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

துயரப் பருப்பு, கவலைப் பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மக்களிடையே இருக்கும் மனித நேயத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் நோக்கம்.

மீ அன்ட் யூடியூப் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேவை தொடங்கி அதில் இந்த பாடலை பதிவேற்றம் செய்துள்ளேன். இது போன்ற பல நல்ல விஷயங்களை அந்த சேனலில் பதிவேற்றம் செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries