கில்லிங் வீரப்பன் படத்தில் நடித்தது மகிழ்ச்சி: சிவராஜ் ராஜ்குமார்

1446831180_hattrick-hero-shivaraj-kumar-speaks-about-movie-during-killing-veerappan-audio-launchசந்தன கடத்தல் வீரப்பனை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கில்லிங் வீரப்பன்’. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில், வீரப்பனை என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் ராஜ்குமார் நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, இது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஹீரோயிசமோ, ‘பஞ்ச்’ வசனமோ இல்லை. இந்த படத்தின் டைரக்டர் கோபால் வர்மா என்ன சொன்னாரோ அப்படி நடித்திருக்கிறேன். எனது தந்தை ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் பற்றி இந்த படத்தில் விரிவாக சொல்லப்படவில்லை. ஆனால் வீரப்பனை நான் கொல்வதாக காட்சி வருகிறது. அதில் நான் நடித்திருக்கிறேன்.

வீரப்பனை நான் கொல்வது போல நடித்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு நிறைவு தந்திருக்கிறது. இதில் சினிமா பாணியில் நியாயம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries