சசிகுமார்– சமுத்திரக்கனி இணைந்து நடித்த ‘சுப்பிரமணியபுரம்’ மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 2008–ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கதாநாயகனாக நடித்த சசிகுமார் இயக்கினார். இதில் அவருடன் சமுத்திரக்கனியும் இணைந்து நடித்தார்.
அடுத்து சசிகுமார் நடித்த ‘ஈசன்’ படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை. பின்னர் ’நாடோடிகள்’ படத்திலும் இருவரும் இணைந்து பணிபுரிந்தார்கள். இதிலும் சமுத்திரக்கனி, சசிகுமாருடன் சேர்ந்து திரையில் முகம் காட்டவில்லை.
இப்போது 8 வருடங்களுக்கு பிறகு சசிகுமாரும், சமுத்திரக்கனியும் ஒரு புதிய படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். ‘வெற்றிவேல்’ என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை வசந்தமணி இயக்குகிறார். சசிகுமாரும், சமுத்திரக்கனியும் நடிக்கும் இந்த படத்தில் மியாஜார்ஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் தம்பி ராமையா, ரேணுகா ஆகியோர் நடிக்கிறார்கள். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சசிகுமார் படத்தில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.