அனிருத் எனது மானசீக ஹீரோ –மனிஷா கவுர்

MAN-CUT-OUT‘சாய்ந்தாடு’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருப்பவர் மனிஷா கவுர். மலேசியா–பஞ்சாமி தம்பதியரின் மகளான இவர் ‘அரபுக்குதிரை’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

சாய்ந்தாடு படத்தில் நடிக்க வந்தது பற்றி கேட்ட போது…

நான் பஞ்சாபி மலேசியா பெண். ‘சாய்ந்தாடு’ படத்தில் ஒரு கிளப் பாடலுக்கு நடனம் ஆடவும், மலேசியா போர்ஷனில் நடிக்கவும், டைரக்டர் கஸாலி என்னை தேர்வு செய்தார். சினிமாவுக்காகக் காத்திருந்த எனக்கு ‘சாய்ந்தாடு’ படமும் அதில் நான் ஆடும் ‘அரபுக்குதிரை’ பாடலும் மிக அருமையான சந்தர்ப்பம். ‘அரபுக்குதிரை’ பாட்டுக்கு நான் போட்டிருக்கிற குத்தாட்டத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும்.

தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். ‘சாய்ந்தாடு’ படம் முழுவதுமாக முடிந்து விட்டது. கூடிய விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்தப்படம் வெளிவந்தபின் தமிழில் எனக்கென்று தனியிடம் இருக்கும்.

தமிழில் அஜித், விஜய், சூர்யா, இப்போ… அதர்வா! அதற்கப்புறம் அனிருத்தை ரொம்ப பிடிக்கும். அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது தோற்றம், உடல்வாகு, சில ஆல்பங்களில் அவரது பிரசன்டேஷன் அற்புதமாக இருக்கும். எனக்கு அவர் மிகவும் பிடித்தமானவர்.

‘சாய்ந்தாடு’ மெடிக்கல் கிரைம் கதை. கிராபிக்ஸ் நிறைய இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும்பிடிக்கும்.

‘சாய்ந்தாடு’ படத்தில் ஆதர்ஸ்–அனு கிருஷ்ணா நாயகன், நாயகியாக நடித்திருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries