இறுதிசுற்று படப்பிடிப்பின் போது கதாநாயகி விட்ட குத்தில் ஒரு பல் உடைந்தது: மாதவன்

sala-khadoos-R-Madhavan-body-scene-hd-imagesமாதவன் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் ‘இறுதிச்சுற்று’ டைரக்டர் சுதா இயக்கியுள்ள இந்த படத்தில் குத்துச் சண்டை பயிற்சியாளராக மாதவன் நடித்திருக்கிறார். உண்மையான குத்துச்சண்டை வீராங்கணை ரித்திகாசிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதற்கான சி.டி.யை இயக்குனர் பாலா வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய மாதவன், ‘தமிழ் ரசிகர்கள் இப்போது மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். இதனால் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். இதனால் தமிழ்படங்களில் நடிப்பதில் 3 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

‘இறுதிச்சுற்று’ படம் நல்ல கதையம்சம் கொண்டது. தமிழ்நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளர், ஒரு பெண் குத்துச்சண்டை வீராங்கணையை சர்வதேச அளவில் புகழ் பெற வைப்பதுதான் கதை.

இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் ரித்திகாசிங் நிஜமாகவே குத்துச்சண்டை வீராங்கணை அவருக்கு நான் குத்துச்சண்டை பயிற்சி அளிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக முகத்தில் குத்திவிட்டார். இதில் எனது பல் ஒன்று உடைந்து விட்டது. அந்த அளவு கதையுடன் ஒன்றி நடித்திருக்கிறார்.

இந்த படத்தைப் போன்று எந்த படத்திலும் குத்துச் சண்டையை பார்க்க முடியாது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்கள்தான் குத்துச்சண்டை வீராங்கணைகளாக உருவாகிறார்கள். அவர்கள் சாதனை படைக்கும் விதத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் எந்த படத்திலும் காசுக்காக நடிப்பதில்லை. மனதுக்கு பிடித்து இருந்தால்தான் நடிப்பேன்.

‘இறுதிச்சுற்று’ படம் எனக்கு திருப்திகரமாக இருந்ததால் நடித்தேன். இதில் பெண்களுடன் ஜாலியாக சுற்றுபவனாகவும் நடித்திருக்கிறேன். ஆனால், வரம்பு மீறாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, ‘தமிழகத்தின் சொத்து மாதவன். அவர் படத்துடன் என் படமோ, கார்த்தி படமோ வந்தாலும் என் வீட்டில் எல்லோருக்கும் மாதவன் படத்துக்கு போக வேண்டும் என்று கூறுவார்கள்’ என்றார். நிகழ்ச்சியில் இந்தி பட இயக்குனர் ராஜ்குமார் ஷிரானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries