இறுதிக்கட்டத்தை நெருங்கும் கஸ்மோரா

hqdefault‘கொம்பன்’ வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்து வரும் புதிய படம் ‘கஸ்மோரா’. இப்படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை வருகிற 9-ந் தேதி தொடங்கவிருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் கார்த்தி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது.

இப்படத்தில் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில், கார்த்தியின் அப்பாவாக விவேக் நடிக்கிறார். விவேக் ஒரு நடிகரின் அப்பாவாக நடிப்பது இதுதான் முதல்முறை.

அதேபோல், இந்த படத்தில்தான் கார்த்தியும்-நயன்தாராவும் முதன்முதலாக இணைந்திருக்கிறார்கள். இந்த வருடத்தின் கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries