பொங்கலுக்கு வெளியாகும் சிம்பு பாடல்

simbu-gautham-menons-acham-yenbathu-madamaiyada-team-is-heading-back-to-chennai-on-june-12th-photos-pictures-stillsசமீபகாலமாக எங்கு பார்த்தாலும் சிம்புவுக்கு எதிரான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. தற்போது, அந்த செய்திகள் அனைத்தும் சற்று ஓய்ந்திருக்கிறது. சிம்புவுக்கு எதிராக பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த சமயத்திலும், இவர் நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியானது.

இந்த டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில், இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள ‘தள்ளிப்போகாதே’ என்ற பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. எனவே, ஆடியோ வெளியீட்டுக்கு முன்னால் இப்பாடலை மட்டும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, வருகிற பொங்கல் தினத்தில் ‘தள்ளிப் போகாதே’ என்ற ஒரு பாடலை மட்டும் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தாமரை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் என்ற மலையாள நடிகை நடித்துள்ளார். வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online