ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட உலக சினிமா சென்னையில் இன்று

victoriaendபல டேக்குகள் எடுத்துதான் ஒரு சினிமாவை சிறப்பாக உருவாக்க முடியும் என்று கற்பிதத்தை அடித்து நொறுக்கி ஒரே ஒரு டேக்கில் கூட உலகமே கொண்டாடும் ஒரு சினிமாவை உருவாக்க முடியும் என்று நிரூபித்துள்ள படம்தான் ‘விக்டோரியா’.

65-வது பெர்லின் திரைப்பட விழாவில் போட்டியிட்டு சிறந்த ஒளிப்பதிவுக்காக வெள்ளிக்கரடி விருது வென்ற இந்தப்படம் சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ள 13-வது சர்வதேச பட விழாவில் உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படுகிறது.

‘ஸ்டுர்லா பரந்த் க்ரோவ்லனின் கேமராவில்’ ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 88-வது அகாடமி விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கான போட்டியில் பங்கேற்று விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது.

‘செபாஸ்டியன் ஸ்கிப்பர்’ என்ற ஜெர்மன் இயக்குனரின் இந்த படம் சிறந்த திரைப்படம் உட்பட 6 விருதுகளை வென்று ஜெர்மன் ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளது.

பெர்லினுக்கு குடிபெயரும் இளம் ஸ்பானிஷ் பெண்ணான லையா, அந்நிய இளைஞன் ஒருவனை நண்பனாக்கிக் கொள்கிறாள். அவனுடன் வெளியே செல்லும் ஒரு இரவில் அவள் ஒரு வங்கிக் கொள்ளையில் சிக்க வைக்கப்படுகிறாள். அதன் பின் நடக்கும் அதிர வைக்கும் சம்பவங்கள்தான் படம்.

அடுத்து என்ன, அடுத்து என்ன என்று ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு வரும் ரியல் திரில்லர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries