பாண்டிராஜுக்கு கார் பரிசளித்த சூர்யா

suriya-gets-pandiraj-onboard-700x430சூர்யா நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த படம் ‘பசங்க-2’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். பிந்துமாதவி, முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படம் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னமும் இந்த படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு சூர்யாவை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர்களில் ஒருவர் என்ற முறையில், சூர்யா இயக்குனர் பாண்டிராஜூக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

சூர்யா சார்பில் 2டி என்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகரபாண்டியன் பாண்டிராஜுக்கு அந்த காரை நேரில் சென்று பரிசளித்தார். சூர்யா கார் பரிசாக அளித்தது பாண்டிராஜுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online