படங்களில் காதலியாக நடித்து அலுத்து விட்டது: பார்வதி

maxresdefault‘பெங்களூர் நாட்கள்’ பட அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, பார்வதி, ஸ்ரீதிவ்யா, டைரக்டர் பொம்மரிலு பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பார்வதி பேசும்போது, நடிகைகளின் நடிப்பை மட்டும் ரசிகர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் பாத்திரங்களை மட்டும் ரசிக்க வேண்டும். நடிகைகள் பொதுவான சொத்து அல்ல.

அப்படியாரும் பார்க்க வேண்டாம். இதற்காகவே நான் படங்களில் மட்டும் நடிக்கிறேன். விளம்பர படங்களில் நடிப்பதில்லை. அது என் வேலையல்ல. திறப்பு விழாக்களுக்கும் செல்வது இல்லை.

வாழ்க்கைக்கு பணம் தேவை என்பதால் நான் நடிப்பதற்கு தேவையான சம்பளத்தை கேட்டு வாங்குகிறேன். விலை உயர்ந்த காரில் செல்லும் ஆசை இல்லை.

படங்களில் காதலி வேடங்களில் நடித்து அலுத்துப் போய் விட்டது. நல்ல பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது ஆசை என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா, முன்னாள் காதலி கொடுத்த நினைவு பரிசு இருந்தால் அதை நாம் வீட்டில் வைப்போம். ஆனால் ராணாவுக்கு அது போன்ற பரிசுகளை வைக்க மியூசியம்தான் கட்ட வேண்டும் என்று கிண்டல் அடித்தார்.

ராணாவுக்கு திரிஷா என்ன உறவு என்ற கேள்விக்கு ‘இல்லாதவர்கள் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்று ராணா கூறினார். இதுபற்றி கூறிய ஆர்யா, ‘‘எனக்கு திரிஷா தங்கச்சி. ராணாவுக்கு என்ன முறை என்பதை ராணாதான் சொல்ல வேண்டும்’’ என்று சொல்லி கலகலப்பூட்டினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries