சரித்திர படங்களில் நடிக்க ஆசை: ஜெயம் ரவி

jayam-story_647_091015034830தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல்போன கதாபாத்திரம் எது என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ஜெயம்ரவி, ‘சரித்திரப்படம்’ என்று கூறினார். ‘பேராண்மை’, ‘தனி ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களில் எந்த படம் மிகவும் பிடித்தமானது என்ற கேள்விக்கு, ‘ஒவ்வொருவருக்கும் வலது, இடது என்று இரண்டு கண்களும் முக்கியம். அதுபோல் இரண்டு படங்களும் பிடிக்கும்’ என்றார்.

ஜெயம்ரவி நடித்துள்ள ‘மிருதன்’ படம் பிப்ரவரி 12–ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. நாளை இப்படத்தின் ஆடியோ வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries