அமீர் இயக்கத்தில் நடிக்கும் ராணா?

Is-Roja-Hero-Facing-Problem-With-Raana‘மௌனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் அமீர். இவர் ‘யோகி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு ஜெயம் ரவி வைத்து ‘ஆதிபகவன்’ என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை.

இதனையடுத்து நடிப்பு, இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்த அமீர், வி.இசட்.துரை இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவருடன் ஆர்யாவும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், அமீர் புதிய படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதில் கதாநாயகனாக ராணாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ‘பாகுபலி’ படத்தில் ராணாவின் நடிப்பு சிறப்பாக பேசப்பட்டதால், ராணாவை தேர்வு செய்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online