தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஜோடி சேரும் சமந்தா?

6903_samantha dspஇசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகர்களாக மாறி வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான தில் ராஜு தயாரிக்க இருக்கும் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சுகுமார் இயக்கவிருக்கிறார்.

இதில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக சார்மி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புலி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இசையமைப்பாளராக வெற்றி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாகவும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries