பொங்கல் தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

what-is-the-meaning-behind-vijays-title-theri-photos-pictures-stillsவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தெறி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு பத்து நாட்கள் மட்டுமே நடைபெற இருக்கிறது. இந்த பத்து நாட்களில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும், விஜய்-எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளையும் படமாக்கவுள்ளனர். அனேகமாக படப்பிடிப்பு ஜனவரி 20ம் தேதி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு தான் ‘தெறி’ படத்தின் டீசரை உருவாக்க இருக்கிறார்களாம். பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த செய்தி விஜய் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இப்படத்திற்குப் பிறகு பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. விஜய் சினிமா உலகத்திற்கு வந்து 23 வருடங்கள் ஆகிறது. இதற்காக புரோமோ வீடியோ ஒன்று, இன்று வெளியாக இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries