பசங்க 2 படம் பசங்களுக்கு இலவசம்

Pasanga21சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பசங்க 2’. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினர்களையும் இப்படம் கவர்ந்துள்ளது.

குழந்தைகள் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்பதால் இந்த படத்திற்கு தற்போது சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்க்க வரும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்றும் அவர்கள் இந்த படத்தை தனியாகவோ அல்லது பெற்றோர்களுடனோ வந்தால் இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை இன்று முதல் கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கரோல் அரோலி இசையமைத்த இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online