மீண்டும் இணையும் பீப் பாடல் கூட்டணி

simbu-and-anirudhசிம்பு பாடிய ‘பீப் பாடல்’ சமீபத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வழக்குகளும் தொடரப்பட்டன.

இன்னும் இந்த சர்ச்சை ஓயாத நிலையில், சிம்பு, அனிருத் இணைந்து பாடல் ஒன்றை பாட இருக்கின்றனர். ஆனால், இவர்கள் பாட இருப்பது தெலுங்கு படத்திற்காக.

‘மங்காத்தா’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்த மஹத் தற்போது தெலுங்கில் ‘ஷீ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 2 பாடல்களை பாட சிம்பு மற்றும் அனிருத் இருவரையும் மஹத் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

பாம்பே போலே என்பவர் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களுக்காக, சிம்பு மற்றும் அனிருத் விரைவில் கம்போஸிங்கில் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries