வசந்தபாலனுடன் கைகோர்க்கும் அருள்நிதி?

Arulnidhi Pranitha Udhayan New Movie Stills (3)அருள்நிதி கடந்த ஆண்டு ‘டிமாண்டி காலனி’, ‘நாலு போலீம் நல்லா இருந்த ஊரும்’ ஆகிய 2 படங்களில் நடித்து இருந்தார். இதில் ‘டிமாண்டி காலனி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற, ‘மெமரீஸ்’ படத்தின் தமிழாக்கமான ‘ஆறாது சினம்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில், சித்தார்த் நடிப்பில் வெளியான ‘காவியத்தலைவன்’ படத்தை இயக்கி வசந்தபாலன் அருள்நிதிக்கு சொன்ன கதை அவருக்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. பொருத்தமான கதை என்று கருதுவதால் இந்த படத்தில் நடிக்க அருள்நிதி ஒப்புக்கொண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. அதை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries