இந்தியன் என்ற பெருமையை நிலைநாட்ட வரும் மூன்றாம் உலகப்போர்

moondram-ulaga-por-first-look_141628539510சுனில்குமார், அகிலா கிஷோர், வில்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மூன்றாம் உலகப்போர்’. 2025-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் நடப்பதாக கற்பனையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுகன் கார்த்தி. இப்படத்திற்கு வேத் சங்கர் இசையமைத்திருக்கிறார். தேவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் நாயகன் சுனில்குமார் இதில் இந்திய போர் வீரனாக நடித்திருக்கிறார். சீனாவில் பிறந்து வளர்ந்து, சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்ட வில்சன், சீனா போர் படை தளபதியாக நடித்திருக்கிறார்.

3 வருடமாக உருவாகி வரும் இப்படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் பணிகளுக்காகவே 1 வருடம் செலவிட்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்க சென்னையிலேயே இந்த படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். எபெக்ட்ஸ் அன்ட் லாஜிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.

2025-ல் போர் நடப்பது போன்ற கற்பனை கதை என்பதால், அந்த காலக்கட்டத்தின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, போர் கருவிகள் மற்றும் ராணுவ தளவாடங்களை யூகித்து இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும், தான் ஒரு இந்தியன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இந்த படத்தின் கதையை அமைத்திருக்கிறார்களாம். மேலும், உலகத்தில் போர் என்பது ஒரு நாட்டின் அழிவை நோக்கித்தான் செல்லும்.

அப்படியிருக்கையில் இந்த போர் எதற்கு? என்பதை யோசிக்க வைக்கும் விதமாக ஒரு நல்ல செய்தியையும் இப்படம் மூலமாக சொல்லியிருக்கிறார்களாம்.

இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்ததோடு, படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர்.

இப்படம் வருகிற ஜனவரி 22-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. டி.ஆர்.எஸ்.ஸ்டுடியோ மற்றும் ட்ரீம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் சார்பில் டி.ஆர்.எஸ்.அன்பு மற்றும் வி.சுரேஷ் நாராயண் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online