வரலட்சுமிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷால்

vishal-varalakshmiவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கதகளி’ படம் நாளை வெளியாகவிருக்கிறது. அதே நாளில், வரலட்சுமி, சசிகுமார் நடிப்பில் பாலா இயக்கியுள்ள ‘தாரை தப்பட்டை’ படமும் வெளியாகிறது. இதுதவிர, ‘கெத்து’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களும் நாளை வெளியாகவிருக்கிறது.

விஷால், எப்போதும் தன்னுடைய படம் வெளியாகும் நாளில் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்ப்பது வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல், நாளை விஷால் தன்னுடைய படத்தை நேரடியாக சென்று தியேட்டரில் பார்க்கவுள்ளார்.

ஆனால், தனது படத்தை முதலில் பார்ப்பதை தவிர்த்து ‘தாரை தப்பட்டை’ படத்தை முதலில் பார்க்கவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் விஷால் கூறும்போது, வரலட்சுமியுடன் அவர் நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்தை முதலில் பார்ப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன். எனவே, ‘தாரை தப்பட்டை’ முதலில் படத்தை பார்த்துவிட்டு, அதன்பிறகுதான் ‘கதகளி’ படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online