ஜீவா படத்தின் கதாநாயகி மாற்றம்

49931079-507c-459b-849e-3583e92c4254OtherImage‘யான்’ படத்திற்குப் பிறகு ஜீவா தற்போது ‘திருநாள்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை ராம்நாத் இயக்கி வருகிறார். மேலும் ‘போக்கிரி ராஜா’ படத்திலும் ஜீவா நடித்து வருகிறார்.

இப்படங்களை அடுத்தி ஜீவா ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமானார். இதற்கான போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டு புகைப்படங்கள் வெளியானது.

ஆனால், தற்போது கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் காஜல் அகர்வால் முதல் முறையாக ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்க இருக்கிறார். இவர்களுடன் சுனைனா, 144 படத்தின் மூலம் அறிமுகமான சுருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா, ஆர்.ஜே.பாலாஜி, பால சரவணன், மயில் சாமி, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ம்தேதி தொடங்க இருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries