சண்டக்கோழி 2 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடக்கம்

MV8y2fRவிஷால்-லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். ராஜ்கிரண், மலையாள நடிகர் லால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து இதே கூட்டணி மீண்டும் இணையப் போவதாக கடந்த வருடமே செய்திகள் வெளிவந்தது. கடந்த மே மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. பின்னர் சில காரணங்களால் படப்பிடிப்பை தொடங்க முடியாத சூழ்நிலை எழுந்தது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். விஷால் தற்போது ‘மருது’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. அதன் பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries