விஜய் அடுத்த படத்தின் புதிய அப்டேட்

12509761_1065900826763816_3219151244916485125_nவிஜய் தற்போது அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பினை லடாக்கில் நடத்தி முடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் தொடங்க உள்ளனர். ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தையடுத்து விஜய், பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 60வது படமான இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் விஜயா புரொடக்‌ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்த பூஜையில் தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, இயக்குனர் பரதன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online