காதலும் கடந்து போகும் விளம்பர யுக்திக்கு எதிர்ப்பு

Kadhalum-Kadanthu-Pogum-Movie-Official-Teaser-Released-–-Vijay-Sethupathiவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் ‘க க க போ’ விரைவில் என்று விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு புதுமுக இயக்குனர் விஜய் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் விஜய் ‘கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ‘க க க போ’ என்று சுருக்கி தலைப்பிட்டு இருக்கிறார். இது குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, “பெரும் வரவேற்பு பெற்ற வடிவேலுவின் வசனம் தான் ‘க க க போ’.

எங்கள் படத்துக்கு சிறப்பு தலைப்பாக இருக்கும் என்று அதையே வைத்தோம். ஆனால் இப்போது நலன் தனது படத்துக்கும் இதே தலைப்பு வைத்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாங்கள் முதலிலேயே இந்த தலைப்பை சூட்டிவிட்டோம். இது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தனது படத்தின் தலைப்புக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் ‘காதலும் கடந்து போகும்’ விளம்பரப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries