உதயநிதி படத்தில் விஷ்ணு விஷால்

vishnu-vishal-stillஉதயநிதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘கெத்து’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அகமது இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், சுசீந்திரன் இயக்கும் புதிய படத்திலும் உதயநிதி ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்கப்போவதாக ஏற்கெனவே உறுதியாகியிருந்தது. அதில் உதயநிதி மட்டுமே முதலில் கதாநாயகனாக உறுதி செய்யப்பட்டிருந்தார். தற்போது மற்றொரு ஹீரோவாக விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷ்ணு விஷால் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைகிறார்.

மேலும், இப்படத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இமான் இசையமைக்கவுள்ளார். மதி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online