நாசரின் இளைய மகன் லுத்புதீன் பாட்ஷா. இவர் விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பின்னர், விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது புதிய படத்தில் தனி ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக சலோனி லுத்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கவுள்ளார். இப்படத்தை தனபால் பத்மநாபன் என்பவர் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் பூஜை சிங்கப்பூரில் கோலாகலமாக நடந்தது. இதில் நாசர், சதீஷ் லுத்புதீன் பாட்சா, சலோனி லுத்ரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சிங்கப்பூரிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில், இப்படம் குறித்த பிற தகவல்களை வெளியிடுவார்கள் என தெரிகிறது.