விஜய் தந்தை பட டீசரை வெளியிட்ட ஆர்

CWuOkrWVAAApgmBவிஜய்யின் தந்தையும் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது ‘நையப்புடை’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் பா.விஜய்யும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை விஜய் விக்ரம் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் தயாரிப்பாளர் தாணு, எஸ்.ஏ.சந்திர சேகர், பா.விஜய், இயக்குனர்கள் வெங்கடேஷ், பொன்ராம், ஜீவன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தின் டீசரை ஆர்யா வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். பின்னர் பேசிய ஆர்யா, ‘சந்திர சேகர் சார் எனக்கு போன் செய்து ‘நையப்புடை’ படத்தில் தான் நடித்திருப்பதாகவும், இளம் இயக்குனர் இயக்கியிருப்பதாகவும், படத்தை பற்றி மிகவும் ஆர்வமாக பேசினார். பின்னர் இந்த விழாவில் கண்டிப்பாக கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பெரிய நடிகர்களை வைத்து 40 படங்களை இயக்கியவர், பெரிய ஸ்டாரின் தந்தை, இருந்தாலும் அவர் நடிப்பை பற்றி மிகவும் ஆர்வமாக பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நான் ஒரு ஹீரோவாக இருந்தாலும், சண்டைக்காட்சிகளில் நடிக்க மிகவும் சிரமப்படுவேன். ஆனால், சந்திர சேகர் சார் இந்த வயதிலும் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது.

பா.விஜய் என்னுடைய படங்களுக்கு நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒரு பாடலாசிரியராகவும், கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்து வருகிறார். அவருக்கும் இப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries