போலீஸ் கதையில் நடிக்க பயந்தேன்: விஜய் சேதுபதி

14MP_sethupathi_2__2583102fவிஜய் சேதுபதி–ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்கும் படம் சேதுபதி. அருண்குமார் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:–

போலீஸ் கதையம்சம் உள்ள படமாக ‘சேதுபதி’ தயாராகி உள்ளது. இந்த படத்தின் கதையை டைரக்டர் என்னிடம் சொன்ன போது நடிக்க பயந்தேன். போலீஸ் வேடம் எனக்கு பொருத்தமாக இருக்குமா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்றெல்லாம் தயக்கமாக இருந்தது. வற்புறுத்தல் காரணமாக அறைகுறை மனதோடு நடித்தேன்.

படத்துக்கு பத்து தலைப்பு களை பரிசீலித்தோம். இறுதியில் சேதுபதி பொருத்தமாக இருப்பதாக சொன்னார்கள். அந்த தலைப்பும் என் தகுதிக்கு மிகுதியாகபட்டது. ஓவராக கெத்து காட்டுகிறேன் என்று நினைப்பார்களோ என்று தயங்கினேன்.

கதையின் மீதும் டைரக்டர் மீதும் எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது. ரம்யா நம்பீசன் சிறந்த நடிகை. இரண்டு குழந்தைகள் தாயாக இதில் நடித்து இருக்கிறார். இப்போது படங்கள் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல.

இந்த படத்தின் தயாரிப்பாளரிடமும் பணத்தை இழந்து விடக்கூடாது என்று பயமுறுத்தினேன். அவர் அதை பொருட்படுத்தாமல் கதையின் மீது இருந்த நம்பிக்கையில் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். படம் எதிர்பார்த்த படி சிறப்பாக வந்துள்ளது.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

நடிகை ரம்யா நம்பீசன் விழாவில் பேசும்போது, ‘விஜய் சேதுபதியுடன் இரண்டு குழந்தைகள் தாயாக இந்த படத்தில் நான் நடித்துள்ளேன். வெற்றி ஒருவரை மாற்றி விடும். ஆனால் பீட்சா படத்தில் விஜய் சேதுபதியை எப்படி பார்த்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறார். இது குடும்ப படம்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries