மிருதன் கிளைமாக்சில் 500 துணை நடிகர்கள்

Official-declaration-of-Miruthanஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘மிருதன்’ படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி காதலர் தினத்தையொட்டி வெளிவரவிருக்கிறது. சக்தி சௌந்திரராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

Zombie பாணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் சினிமாவுக்கும் முற்றிலும் வித்தியாசமானது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக்காட்சிக்காக சுமார் 500 துணை நடிகர்களை பயன்படுத்தியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த காட்சியை ஒருநாள் இரவு ஆரம்பித்து அதிகாலை வரை எடுத்துள்ளனர். அப்போது, இந்த காட்சியில் நடித்த 500 துணை நடிகர்களும் எதையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார்கள். இதுபோல், படத்தில் குறிப்பிடும்படியான நிறைய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries