விசாரணை ரிலீஸ் தேதி அறிவிப்பு

Visaranai-2015வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி, அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள புதிய படம் ‘விசாரணை’. இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது. இப்படத்தை தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது, இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார்கள். அதன்படி, வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவிருக்கின்றனர்.

பல்வேறு நாடுகளில் விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online