விஜய் சேதுபதியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

389448-vijay-sethupathiவிஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும் ‘மெல்லிசை’, ‘இறைவி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கின்றனர். ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் இந்த புதிய படத்திற்கு ‘ரெக்கை’ என பெயர் வைத்திருக்கின்றனர். இந்த படத்தை கணேஷ் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்தவர்.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாக இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online