அதர்வா பட விழாவில் ஏ.ஆர்.ரகுமான் – ஏ.ஆர்.முருகதாஸ்

the-audio-of-atharvaas-next-chandi-veeran-will-be-released-on-the-6th-of-may-photos-pictures-stillsஅதர்வா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஈட்டி’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதர்வாவின் நடிப்பும், அவருடைய உழைப்பும் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. இப்படத்தை அடுத்து அதர்வா நடிப்பில் ‘கணிதன்’ படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஆர்.ரகுமானும், ஏ.ஆர்.முருகதாசும் கலந்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி. இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர். அதுபோல் இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஆதலால் இருவரும் இப்படத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக கூறுகிறார்கள்.

‘கணிதன்’ படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக கேத்ரின் தெரேசா நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries