விரைவில் முடிவுக்கு வருகிறது தனுஷின் கொடி

Dhanush-tweaks-his-look-with-thickened-beard-in-Kodiதங்கமகன் படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இதில் துனுஷ் முதன் முதலாக அண்ணன் – தம்பி என்று இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ் அரசியல்வாதியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கியது. தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. அனேகமாக பிப்ரவரி 21ம் தேதி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடிக்க இருப்பதால் விரைவில் முடிக்க தனுஷ் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா மற்றும் ஷாமிலி நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries