விஜய் படத்தில் போக்கிரி நண்பன்

vijay-in-theri_145274981230விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தில் அவருடைய நண்பராக நடித்திருப்பவர் ஸ்ரீமன். இவர் ‘போக்கிரி’ மட்டுமல்லாது ‘நிலாவே வா’, ‘நெஞ்சினிலே’, ‘சுறா’, ‘வில்லு’ என விஜய் நடித்த பல படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக விஜய் படங்களில் தலைகாட்டாமல் இருந்த ஸ்ரீமன் தற்போது மீண்டும் விஜய் படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் 60-வது படமாக உருவாகவுள்ள பரதன் இயக்கும் புதிய படத்தில் ஸ்ரீமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இன்னும் ஒருசில தினங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஏப்ரலுக்கு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online