5 வயது குழந்தையின் அப்பாவாக அருள்நிதி

AARATHU-SINAM-1‘நாலு பேரும் நல்லா இருந்த ஊரும்’ படத்துக்குப்பிறகு அருள்நிதி நடிக்கும் படம் ‘ஆறாது சினம்’. ‘டிமாண்டி காலனி’யை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இது அருள்நிதி போலீசாக நடிக்கும் 2–வது படம். இதில் இவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் 5 வயது குழந்தைக்கு அப்பா – அம்மாவாக நடிக்கிறார்கள். ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இந்த படத்தையும் இயக்குகிறார். இசை – எஸ்.எஸ்.தமன். கொலை குற்றவாளிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஏற்படும் சிரம்மங்களை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே இதன்கதை.

மதுரை, செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பிப்ரவரியில் ஆறாது சினம் திரைக்கு வருகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries