அமெரிக்காவில் கபாலி புதிய சாதனை

Kabali-1‘மலரட்டும் மனிதநேயம்’ என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் நேற்று நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் தாணு பேசும்போது, நான் 1980ல் ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்டேன். இப்போது ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தை தயாரித்து வருகிறேன். எந்தப் படமும் இல்லாத சாதனையாக அமெரிக்காவில் மட்டும் ‘கபாலி’ படம் ரூ.8.5 கோடி வியாபாரமாகியிருக்கிறது.

வருமான வரி சோதனை வந்தாலும் பரவாயில்லை ரூ. 8.5 கோடி வியாபாரமாகியிருக்கிறது என்பதுதான் உண்மை. யாருக்குமே இதுவரை வியாபாரம் ரூ.2.5 கோடியைத் தாண்டவில்லை என்று கூறினார்.

மேலும் அவர்கூறும்போது, சென்னை மழை வெள்ளத்தின்போது, தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தங்க இடம், உண்ண உணவு அளித்து மனித நேயம் காட்டியவர் ரஜினி. இதுபோல மனிதநேய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. இந்த மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online