ரஜினியின் போன் நம்பரை கேட்கும் தைரியம் எனக்கு இல்லை: அக்‌ஷய் குமார்

akshaykumarenthiran2villain-16-1450251386ரஜினியின் போன் நம்பரை கேட்கும் தைரியம் எனக்கு இல்லை என்று இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நேற்று மாலை பத்ம விருதுகளை அறிவித்தது. அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ரஜினியுடன் எந்திரன் 2 படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமாரிடம் கேட்டபோது, “ அவருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினி சாரின் போன் நம்பர் என்னிடம் இல்லை. அவரிடம் போன் நம்பரை கேட்கும் தைரியம் எனக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

எந்திரன்-2 படத்தின் வில்லன் வேடத்தில் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries