கல்பனா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

kalpana-main.jpg.image_.784.410நடிகை ஊர்வசியின் அக்காவும், பிரபல மலையாள நடிகையுமான கல்பனா நேற்று மாரடைப்பால் காலமானார். நாகர்ஜுனாவுடன் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றிருந்தபோது ஓட்டல் அறையில் இவரது உயிர் பிரிந்தது.

அவரது மரணம் மலையாளம் மட்டுமில்லாது தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்பனாவின் உடல் அவரது சொந்த ஊரான கொச்சி அருகில் உள்ள திருப்புணித்துறையில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் கல்பனாவின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கல்பனாவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘சின்னவீடு’ என்ற படத்தின் மூலம் நமக்கு அறிமுகமாகி, தனது நடிப்புத் திறமையால் இன்று வரை நம் எல்லோர் மனதிலும் தாய்மை உணர்வோடு நிறைந்துவிட்ட அவரை,காலத்திடம் கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறோம்.

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். அயராது கலைப் பணியாற்றியவர். பழகுவதற்கு இனிமையானவர். நகைச்சுவை, குணச்சித்திரம் என்ற இரண்டிலும் தனது நடிப்புத் திறமைக்காக ‘தேசிய விருது’ பெற்றவர்.

நாங்கள் பொறுப்பேற்று கொண்ட நாளிலிருந்து தன்னை நடிகர் சங்க உறுப்பினராக்கி கொள்ள ஆசைப்பட்டு விரைவில் ‘வாழ்நாள் உறுப்பினர் கார்டு’ எடுக்கவிருந்தார். அதன் ஈரம் காய்வதற்குள் நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது! அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,கலை உலகிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை ​​தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries