ரஞ்சித் மேனன் இயக்கிய அன்பென்றால் அம்மா இசை ஆல்பம்

rajith-menonவிக்ரமன் இயக்கத்தில் ‘நினைத்தது யாரோ’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரஞ்சித்மேனன். இவர் அந்த படத்தில் ஒரு இயக்குனராக நடித்திருப்பார். தற்போது இவர் நிஜவாழ்க்கையிலும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

‘அன்பென்றாலே அம்மா’ என்ற பெயரில் சொந்தமாக இசை வீடியோ ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ரஞ்சித் மேனன். இந்த வீடியோ ஆல்பத்தில் ஜரீனா வஹாப் அம்மாவாக நடித்திருக்கிறார்.

ஜரீனா வஹாப் எம்.ஜி.ஆருடன் ‘நவரத்தினம்’ படத்தில் நடித்த கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர். அத்துடன் கமலுடன் ‘விஸ்வரூபம்’, சூர்யாவுடன் ‘ரத்த சரித்திரம்’ போன்ற படங்களில் நடித்தவர்.

மேலும் இந்த ஆல்பத்தில் ‘ஜிகினா’ படநாயகன் ஆன்சன், உலக புகழ்பெற்ற மாடல் அழகி ஸ்ருதி மற்றும் ஏராளமான குழந்தைகளும் நடித்துள்ளனர். ஏழு நிமிடம் ஓடக்கூடிய இந்த இசை வீடியோ ஆல்பத்தில் நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று ஜரீனா வஹாப் கூறி உள்ளார்.

கார், பங்களா, நகை, பணம் என்று எதுவுமே எந்த தாய்க்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி விடாது. மகன், மகள்களின் அன்புக்கு இது எதுவுமே ஈடாகாது என்கிற உயரிய கருத்தை இதில் சொல்லியிருக்கிறோம் என்று ரஞ்சித்மேனன் கூறினார்.

மலையா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்தில் ஸ்வேதா மோகன் பாட, ரஞ்சித் உன்னி இசை அமைக்க, சாரதி பாடலை எழுதி உள்ளார். டைம்ஸ் மியூசிக் நிறுவனம் இன்று (ஜனவரி 26) இந்த வீடியோ இசை ஆல்பத்தை வெளியிடுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries