மடோனாவின் நடிப்பை பார்த்து வியந்த விஜய் சேதுபதி

74520_thumb_665மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மடோனா. இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ‘சூதுகவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமரசாமி இயக்கியிருக்கிறார். இப்படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கிறது.

கொரியன் ரீமேக் படம் இது. விஜய் சேதுபதி இப்படத்தில் கவுன்சிலரிடம் வேலை செய்பவராக நடித்திருக்கிறார். நாயகி மடோனா சென்னையில் வேலை தேடும் பெண்ணாக நடித்திருக்கிறார். இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல் எப்படி உருவாகிறது என்பதே படத்தின் கதை.

இப்படத்தில் காமெடிக்கென்று தனி டிராக் இல்லாமல், கதையோடு ஒன்றி காமெடியை இணைத்திருக்கிறார்கள். 2 பாடல்கள் மற்றும் 2 சண்டைக்காட்சிகளும் இடம் பெறுகின்றன. சமுத்திரக்கனி இப்படத்தில் போலீஸ் எஸ்.ஐ.யாக நடித்திருக்கிறார். நலன் இயக்கிய ‘சூதுகவ்வும்’ படத்தை விட முற்றிலும் மாறுபட்ட படமாக எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் மடோனாவின் நடிப்பைப் பார்த்து விஜய் சேதுபதி வியந்திருக்கிறார். அந்தளவிற்கு விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மடோனா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online