கவுதம்மேனன் – ஜெயம் ரவி – அனிருத் : கோலிவுட்டில் உருவாகும் புதிய கூட்டணி

jayam-ravi_gvm_anirudh_26116mஅரசியலில் மட்டுமல்ல, கோலிவுட்டிலும் அவ்வப்போது புதிய புதிய கூட்டணிகள் உருவாகி வெற்றியை வாரிக் குவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது புதிய கூட்டணி ஒன்று கோலிவுட்டில் உருவாகியுள்ளது. அந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றிக் கூட்டணியாகத்தான் அமையும் என்று உறுதியாக கூறமுடியும்.

ஆம், கவுதம்மேன் – ஜெயம் ரவி – அனிருத் ஆகியோர் அடங்கிய கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ பெரிய வெற்றிப் பெற்றது. அதேபால், தற்போது உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், ஜெயம் ரவி கடைசியாக நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனிஒருவன்’, ‘பூலோகம்’ ஆகிய படங்களும் மெகா ஹிட்டாகின. அனிருத் இசையமைத்த படங்களும் ஹிட் வரிசையில் அமர்ந்துள்ளன.

எனவே, இந்த மூன்று பேர் கூட்டணியில் உருவாகும் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பலாம். விரைவில், இவர்கள் இணையும் படத்தின் வேலைகள் தொடங்கவிருக்கின்றன. இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online