சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து

tamil-actor-simbu-stills03சிம்பு நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியீடும் உரிமையை பெற்றது.

விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கின்றனர். பிப்ரவரி 3ம் தேதி சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இசையை வெளியிட இருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெயப்பிரகாஷ், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஜெய் மற்றும் சந்தானம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries