தெலுங்கில் ரீமேக்காகும் இறுதிச்சுற்று

madyமாதவன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. இப்படத்தை சுதா இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் இந்தியில் ‘சால காதூஸ்’ என்ற பெயரிலும் உருவாகியுள்ளது.

இப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தெலுங்கில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க இருக்கிறார். தெலுங்கிலும் சுதாவே இயக்க இருக்கிறார். சசிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிறகுதான், அதை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிப்பார்கள். ஆனால், ‘இறுதிச்சுற்று’ படம் வெளியாகாமலேயே தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries